S. Shivany / 2020 நவம்பர் 11 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீன் கொள்வனவில் ஈடுபடும் மக்கள் எவ்வித அச்சமும் இன்றி மீன் கொள்வனவில் ஈடுபடுமாறு, பேருவளை மீன்பிடி துறைமுகத்தின் முகாமையாளர் டேவிட் தயாமால் தெரிவித்துள்ளார்.
பேருவளை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள 221 கப்பல்களில், 142 கப்பல்களில்; 1208813 கிலோ கிராம் மீன் உள்ளதாகவும், அவற்றை பொது மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், விசேட அனுமதியை பெற்று மீனவர்களின் நலன்கருதி இவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர்; தெரிவித்துள்ளார்.
சுகதார வழிமுறைகளுக்கமைய, மிகவும் பாதுகாப்பான முறையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026