2020 ஜூன் 07, ஞாயிற்றுக்கிழமை

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன் மரணம்

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 4ஆம் தரத்தில் கல்விப் பயின்ற மாணவன் ஒருவன்  நேற்று (21) வகுப்பறையில் மயங்கி விழுந்த நிலையில்,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவகம்புர-இரண்டாம் பிரிவு,வெல்லம்பிட்டிய பகுதியைச் ​சேர்ந்த எட்மன் எரைம் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனுக்கு களுபோவில வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்  சுமார் 13 மணித்தியாலங்கள்  சிகிச்சையளிக்கப்பட்ட போதும்,இன்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர்  குறித்த மாணவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்​னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X