Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
இலங்கையில் அரசியல் புகலிடம் கோரிய சீனப் பிரஜையொருவர் இலங்கையில் தங்கியிருக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். செல்லுபடியான விஸா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரை இன்று திங்கட்கிழமை விடுதலை செய்தது.
பான் ஜுன் எனும் இந்நபர் தொடர்பாக கொம்பனித்தெரு பொலிஸாருக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுப்பிய கடிதமொன்றை கருத்திற்கொண்ட நீதவான் லங்கா ஜயரட்ன இந்நபரை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
அரசியல் புகலிடம் கோருவோருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து சான்றிதழ்களை வழங்குவதற்கான செயற்பாட்டு உடன்படிக்கைத் திட்டமொன்றை அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் தயாரித்து முடித்துள்ளதாகவும் இதனால் அரசியல் புகலிடகக் கோரிக்கையாளர்கள் செல்லுபடியான விஸா இல்லாமலும் நாட்டில் தங்கியிருக்கலாம் என பொலிஸாருக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது.
அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கே.பூபாலசிங்கம் மற்றும் ஷேர்லின் அஹிலன் ஆகியோர், மேற்படி சந்தேக நபர் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்துள்ளதாகவும் அவருக்கு அரசியல் புகலிடக் கோரிக்கையாளருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து சான்றிதழின் பிரதியொன்றையும் சமர்ப்பித்தனர். அச்சான்றிதழ் டிசெம்பர் 31 ஆம் திகதிவரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
47 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
saniyan Tuesday, 18 October 2011 06:35 AM
இதில் சந்தேகம் இல்லை இனிவரும் காலம் இலங்கைதான் சீனா ஆகிவிடும்.
Reply : 0 0
ibnu aboo Sunday, 30 October 2011 09:57 PM
அக்கரைமாட்டுக்கு இக்கரை பச்சை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago