2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

அங்கவீனமுற்றோர் கொடுப்பனவை பெற்றுக் கொள்ளலாம்

Niroshini   / 2016 மார்ச் 03 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

அங்கவீனமுற்றோர் தேசிய செயலகத்தின் ஊடாக மருத்துவ சேவைகளைப் பெற போக்குவரத்தை மேற்கொள்ளவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஆகக் கூடியதாக 20 ஆயிரம் ரூபாய் தொகையை போக்குவரத்து கொடுப்பனவாக வழங்க சமூக சேவைகள் அமைச்சு முன்வந்துள்ளது.

இதன்படி, தமது அருகிலுள்ள அரச மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சையைப் பெற முடியாத மாற்றுத் திறனாளி ஒருவர் தூரத்திலுள்ள அரச மருத்துவமனையில் சிகிச்சைப் பெற செல்ல வேண்டியுள்ளது.

பிரயாண தூரத்துக்கு ஏற்றவாறு இந்த போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரயாண செலவு தங்குமிட செலவு, உணவுக்கான செலவு ஆகியவற்றுக்கேற்ப நோயாளி ஒருவர் பெறக் கூடிய தொகை சிபாரிசு செய்யப்படும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலக சமூக சேவைகள் அலுவலரிடம் பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கான சுற்றுநிரூபத்தை சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர், அனைத்து மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--