2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

அண்ணமார் கோவிலுக்கு நிதியுதவி

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

ஏழாலை கிழக்கு அண்ணமார் கோவில் புனரமைப்புப் பணிகளுக்காக, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் 2018ஆம் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ், 1 இலட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளார்.

இந்நிதிக்கான காசோலையானது, நேற்றுக் காலை 10 மணியளவில் ஆலய பரிபாலன சபையினரிடம் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனால் வழங்கி  வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகாமம் தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபை உறுப்பினர் அபராசுதன், பிரதேச கிராம அலுவலர், வலி.தெற்கு (உடுவில்) பிரதேச செயலக கலசார உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--