Kogilavani / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
கஷ்டப்பிரதேசம், அதிகஷ்டப் பிரதேசத்தில் கடமையாற்றாது வலிகாமம் வலய பாடசாலைகளில் கடமையாற்றி வரும் ஆசிரியர்கள் இடமாற்றப்படவுள்ளதாக வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளர் செ.சந்திரராஜா தெரிவித்துள்ளார்.
இடமாற்றம் வழங்கப்படவுள்ள ஆசிரியர்களில் ஆண் ஆசிரியர்களின் வயதெல்லை 47 ஆகவும் பெண் ஆசிரியர்களது வயதெல்லை 43 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி வலயக்கல்விப்பபணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் 84 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இவ்விடயம் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன் இடமாற்ற சபைக்கு கொண்டு வரப்பட்டது.
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இவ் இடமாற்றம் அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
26 Oct 2025
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Oct 2025
26 Oct 2025