Kogilavani / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாணத்தின் எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் வியாழக்கிழமை (08) தெரிவித்தார்.
'2014 ஆம் ஆண்டு முதல், மாவட்டத்தின் சகல பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவுகள் யாவும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதுடன் எல்.ஜி.என் (இலங்கை அரச வலையமைப்பு) வலையமைப்பிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்மூலம் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் வடமாகாணத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் மேற்படி ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும்' என அவர் மேலும் கூறினார்.
5 minute ago
20 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
2 hours ago