2021 மே 06, வியாழக்கிழமை

அப்பாவை பார்க்க ஆசையாக உள்ளது:அரசியல் கைதியின் மகள்

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

'விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் எனது அப்பாவை கைது செய்யும் போது, எனக்கு ஒரு வயது என்று அம்மா சொல்லுவார். எனக்கு தற்போது 8 வயாதாகின்றது. இன்னமும் எனது அப்பாவை விடுதலை செய்யவில்லை' என அரசியல் கைதியொருவரின் மகள், கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இணைந்து, யாழில் புதன்கிழமை (30) நடத்திய பேரணியில் கலந்துகொண்ட மகேந்திரன் ரஜிதா என்ற சிறுமியே இவ்வாறு கூறினார்.

'எனது அப்பாவை கட்டியணைப்பதற்கு ஆசையாகவுள்ளது. நான் அப்பாவை பார்க்க வேண்டும், அப்பா என்கூடவே இருக்க வேண்டும். அப்பாவை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மாமா ஏற்பாடு செய்ய வேண்டும்' என அந்தப் சிறுமி கண்ணீர் மல்கக் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .