2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

‘அரசியல் காழ்ப்புணர்ச்சியே வரவு - செலவுத் திட்டத்தை எதிர்ப்பதற்கு காணரணம்’

Editorial   / 2019 நவம்பர் 23 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே, யாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், வரவு - செலவுத் திட்டத்துக்கு எந்தவித பங்களிப்பும் செய்யாமல் அதனைக் குறை கூறுவதோ அல்லது எதிர்ப்பதோ பொருத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், வியாழக்கிழமை நடைபெற்ற சபை அமர்வின் போது முன்மொழியப்பட்டது. இந்த வரவு - செலவுத் திட்டத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து முதல்வர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டில் ஒன்றும் நடைபெறவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் மேலும் இந்த வரவு - செலவுத் திட்டம் மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் நலன்களின் அடிப்படையாகக் கொண்ட வெற்றிகரமானதென்றும் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றுவதென் தம்மால் முன்மொழியப்பட்ட பல விடயங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

“ஆக, இது, எதிர்க்கிற ஒரு வரவு - செலவுத் திட்டம் இதுவல்ல. இந்த வரவு -செலவுத் திட்டத்திலே தாங்கள் பங்களிப்புச் செய்யாமல் இப்ப வந்து நின்று அதனைக் குறை கூறுவது பொருத்தமல்ல.

“ஆகவே அவர்கள் செய்த பங்களிப்பு என்ன என்று கேட்டால் இது முத்லவரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் என்று கூறுகின்றனர். முதல்வரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் என்பது உண்மை தான்.

“உங்கள் வட்டாரங்களினுடைய தேவைகள் எல்லாவற்றையுமே முறையாகத் தரும் பட்சத்தில் வரவு - செலவுத் திட்டத்தில் அவை போடப்படுமென்றும் சொல்லியுள்ளேன்.

“ஆனால் ஒன்றுமே தராமல் எந்தவொரு விடயங்களையும் கலந்துரையாடாமல் தங்களுடைய கருத்தகளை அதாவது, வட்டார ரீதியான மக்களுடைய விடயங்களை எங்களுக்கு அறியத்தராமல் சபை அமர்வின் போது வந்து நின்று வரவு - செலவுத் திட்டத்துக்கு அப்பால் அவர்களுக்கு இருக்கக் கூடிய தனிப்பட்ட பிரச்சினைகளை வைத்துக் கொண்டு தமது கர்ப்புணர்ச்சி விதைத்துச் சென்றிருக்கின்றார்கள்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .