2021 மே 15, சனிக்கிழமை

ஆடுகளைத் திருடியவர் நையப்புடைக்கப்பட்டார்

Princiya Dixci   / 2015 நவம்பர் 23 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

சாவகச்சேரி, டச்சு வீதியில் கட்டப்பட்டிருந்த இரண்டு ஆடுகளை முச்சக்கரவண்டியில் திருட முற்பட்ட சந்தேகநபரொருவர், பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட பின்னர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) ஒப்படைக்கப்பட்டார்.

ஆடுகளை இவர் திருடிய போது, இவரை அடையாளங்கண்ட இளைஞர்கள் பிடிக்க துரத்திய போது, முச்சக்கரவண்டியை கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருந்தார். 

எனினும், தொடர்ந்து துரத்திய இளைஞர்கள், அவரைப்பிடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .