2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ஆழ் குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கு புதிய நடைமுறை

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், ஆழ் குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கு புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையால் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

குடாநாட்டின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தப் புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் இது தொடர்பான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புதிய நடைமுறைகளின் படி குழாய் கிணறுகளை அமைக்க விரும்புபவர்கள் புதிய படிவம் ஒன்றில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதில் கிராம அலுவலர், பிரதேச செயலாளர் ஆகியோரின் சிபார்சுகள் மிக அவசியமானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--