Menaka Mookandi / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-“சுகாதார பரிசோதகர்களின் இடமாற்றம், வட மாகாணத்தில் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை” என யாழ். மாவட்ட பொது சுகாதார சங்கத்தின் தலைவர் கணேஸ்வரன் சதீஸ் தெரிவித்துள்ளார்.
“ஒரு திணைக்களத்தில் உள்ளவர்கள், வெவ்வேறு துறைசார் திணைக்களங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.. இதற்கான அதிகாரம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இல்லை. இது அத்துமீறிய செயற்பாடாகும்.
கடந்த வருடமும் இவ்வாறு நடைபெற்றபோது திணைக்கள விதிமுறைகளுக்கு அமைவாகவே இடமாற்றம் நடைபெற வேண்டுமென வடக்கு முதல்வரால் சுட்டிக்காட்டப்பட்டு இடமாற்றம் நிறுத்தப்பட்டது.
எனினும், இம்முறையும் கடந்த வருடத்தைப் போன்றே இடமாற்றம் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து வட மாகாண ஆளுநருடன் கடந்த மாதம் கலந்துரையாடியுள்ளோம்.
ஏனைய மாகாணங்களின் இடமாற்றத்தின்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை பின்பற்றவதாக ஆளுநர் குறிப்பிட்டிருந்த போதும், குறித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026