Editorial / 2020 ஜனவரி 20 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
இந்திய உள்ளிட்ட, சர்வதேச வல்லரசுகளுக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்லர் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தாங்கள், தங்களது உரிமைசார்ந்த கோரிக்கைகளையே முன்வைப்பதாகவும் கூறினார்.
சர்வதேச அரசியல் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வல்லரசு நாடுகளுகளை, தாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை என்றும் அவர்களுக்கு எதிரான கொள்கைகளை தாங்கள் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்திய எதிர்ப்புக் கொள்கைகளாக சாதிக்க முடியுமா என்று அவரிடம் வினவியபோது, இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு கொள்கைகளையோ நிலைப்பாடுகளையோ தாங்கள் முன்வைக்கவில்லை என்றும் அந்த விமர்சனங்கள் தங்கள் மீது முன்வைக்கப்படும்போது, தமிழ் மக்களை ஒரு பிழையான கோணத்துக்கு இட்டுச்செல்லும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் நலன்கள் பேணப்படல் வேண்டும் என்பதில், எந்தவிதமான மாற்றுக்கருத்துகளும் கிடையாது என்றும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு விடயத்தில், தமிழீழ தாயக நிலப்பரப்பு, எந்தவொரு விடயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயற்படாம் தடுப்பதற்கு, தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால், அதை இந்தியா உணர்ந்து, தமிழ்த் தேசத்தை அங்கிகரிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசத்துடைய தங்களது இருப்பையும் அங்கிகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025