2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் எழுவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் ஏழு பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் இராமலிங்கம் சபேசன, செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டார்.

நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி இரு விசைப்படகுகளுடன் நுழைந்து மீன்பிடித்த தமிழ்நாடு, புதுக்கோட்டைப் பகுதியினைச் சேர்ந்த மீனவர்கள், காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து அவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்க பதில் நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .