2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

இந்திய றோலர்களை கட்டுப்படுத்தக்கோரி போராட்டம்

Gavitha   / 2016 ஜூலை 10 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

இலங்கை, இந்திய றோலர்களின் மீன்பிடியினைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கு முன்பாக நாளை மறுதினம் (12) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தமது தொழிலை இடைநிறுத்தி இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் கடற்றொழிலாளர்கள் இலங்கை, இந்திய றோலர்களின் அத்துமீறிய வடபகுதி மீன்பிடிக்கு எதிராக நடாத்தப்படவுள்ள போராட்டத்தில் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரிடம் மனுக்கள் கையளிக்கப்படவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .