2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

இன விகிதாசாரத்துக்கு ஏற்ப பொலிஸாரும் படையினரும் நிலைகொண்டிருக்க வேண்டும்

Princiya Dixci   / 2016 மார்ச் 22 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்திலே இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்து வருவதாக முறைப்பாடுகள் எழுந்திருப்பதாக தென்பகுதி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,  பொலிஸாரும் படையினரும் அந்தந்த மாவட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப இன விகிதாசாரத்தைப் பேணும் வகையிலுமே நிலை கொண்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்தார். 

இதன்போது கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம், வடக்கில் இராணுவத் தலையீடுகள் மிகவும் அதிகரித்திருந்த ஒரு காலப் பகுதியிலே, அதனைப் படிப்படியாகக் குறைத்து, சிவில் நிர்வாகத்தை கொண்டு வருவதில் நாம் தொடர்ந்து பல நடவடிக்கைகளை சுமுகமான முறையில் மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுவந்தோம். 

ஆனால், இன்று நாம் ஆட்சியதிகாரத்தில் பங்கேற்றிராத நிலையில், ஆட்சி அதிகாரத்தில் இணக்க அரசியல் ரீதியாகப் பங்கெடுத்துவருபவர்களால் இவ்வாறான குற்றஞ்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

அதேநேரம், இவ்வாறான குற்றஞ்சாட்டுக்களை முன்வைப்போர்தான் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களிலும் இணைத் தலைவர்களாக செயற்பட்டு வருகின்றனர். 

எனவே, தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாவட்டங்களில் இவ்வாறான பிரச்சினைகள் நிலவுகின்றதெனில், அதனைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆளுமையை இவர்கள் கொண்டிருக்க வேண்டும். அதற்கு உரிய அக்கறையும், திறமையும் வாய்த்திருக்க வேண்டும். 

இதைவிட்டு, இவ்வாறான குற்றஞ்சாட்டுக்களை வெறுமனே ஊடக செய்தி வாய்ப்புகளுக்காக மாத்திரம் எழுப்பிக் கொண்டிருக்காமல், அவற்றை அகற்றுவதற்கான நடைமுறைச் சாத்திய வழிமுறையில் அணுக வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X