2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

இராஜதந்திர தீர்வோடு அமைச்சர் யாழுக்கு வருவார்

Gavitha   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலுள்ள மீனவர்களின் தேவைகள் குறித்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் சங்கங்களைச் சேர்ந்த 7 பிரதிநிதிகள், மீன்பிடி அமைச்சர் மஹிந்த சமரவீரவைச் சந்தித்து அண்மையில் கலந்துரையாடியதாக யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் என்.பொன்னம்பலம், வியாழக்கிழமை(08) தெரிவித்தார்.

இந்திய இழுவைப் படகுகளின் வருகையை உடனடியாக தடுப்பதுடன், கைது செய்யப்படும் இழுவைப் படகுகளை அரசுடமையாக்குவதோடு அதில் வரும் இந்திய மீனவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டிருந்தோம். அதற்கு அவர் இராஜதந்திர ரீதியில் அணுகி ஒரு முடிவுக்கு வரலாம் என்று, இம்மாதத்தின் இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர் வருகை தந்து விரிவாக ஆராய்வதாகவும் உறுதியளித்தார்.

இதனைவிட மாதகல், குருநகர், பருத்தித்துறை ஆகிய துறைகளில் மீன்பிடித்துறைமுகம் அமைத்துத் தரும்படியும் காக்கைதீவு, காரைநகர், நெடுந்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதியில் நங்கூர மையம் அமைத்துத் தரும்படியும், நெடுந்தீவு, அனலைதீவு, கோவனம், பருத்தித்துறை, மாமுனை, வெற்றிலைக்கேணி போன்ற இடங்களில் உள்ள வெளிச்ச வீடுகளை புனரமைத்து தரும்படியும், மீனவர்களுக்குரிய ஓய்வூதியத்தை அதிகப்படுத்துவதோடு, ஆயுட்கால ஓய்வூதியமாக மாற்றம் செய்து தரும்படியும் கேட்டிருந்தோம். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

சட்டவிரோத தொழில்களான தங்குகூசி வலை, டைனமைட் பாவித்து மீன் பிடித்தல், போன்ற செயற்பாடுகளை உடனடியாக தடுக்கவும், உள்நாட்டு இழுவைப் படகுத் தொழிலை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரியிருந்தோம்.

அதனைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியதாக பொன்னம்பலம் கூறினார் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X