2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இரும்புக் கம்பியால் அடித்த இளைஞன் கைது

George   / 2016 மே 30 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

குப்பிளான் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி காயத்தை ஏற்படுத்திய சந்தேகநபரை திங்கட்கிழமை (30) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், எஸ்.நிரூபன் (வயது 30) என்பவர் படுகாயமடைந்த நிலையில், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், 18 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளனர். 

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .