2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

5 இலட்சம் மெற்றிக்தொன் கொள்முதல்

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

நெல் சந்தைப்படுத்தல் சபையால், வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பிரதேச விவசாயிகளிடமிருந்து 5 இலட்சத்து 16 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கொள்முதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'மேற்படி இரண்டு பிரதேசங்களின் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் நடவடிக்கை, கடந்த 18ஆம் திகதி முதல் புலோலியில் உள்ள அரச களஞ்சியத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நிலையில், இதுவரையில் 516,000 மெற்றிக்தொன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும், சில நாட்களுக்கு இந்த கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X