2020 நவம்பர் 25, புதன்கிழமை

உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு நினைவுத்தூபி

Niroshini   / 2016 மார்ச் 16 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவாக நினைவுத்தூபி அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், யாழ்.ஊடக அமையம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு அமைப்பு ஆகியன தெரிவித்துள்ளன.

மேற்படி அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

'பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றிணையும் ஒற்றுமைப் பயணம். வாருங்கள் ஒன்றாய் சுவாசிக்க' எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ள வடக்கு, தெற்கு ஊடகவியலாளர் இணைப்பு நிகழ்வு, எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது.

இதன் ஓர் அங்கமாக இந்த நினைவுத்தூபி அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

நினைவுத்தூபி அமைப்பதற்கான இடம் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாக அந்த அமைப்புக்கள்தெரிவித்தன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .