2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

ஏழாலை மத்தி சரஸ்வதி சனசமூக நிலையத்தினர் சித்தார்த்தன் எம்.பியுடன் சந்திப்பு

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

ஏழாலை மத்தி சரஸ்வதி சனசமூக நிலையத்தினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (12) இரவு நடைபெற்றது. 

 இதன்போது, தமது சனசமூக நிலையம், அதனோடு இணைந்த விளையாட்டுக் கழகமும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், வளப்பற்றாக்குறைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துக்கூறப்பட்டன.  

குறித்த விடயங்களைக் கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், உரிய முன்னகர்வுகளை மேற்கொண்டு, சனசமூக நிலையப் பிரச்சினைகளை அனைத்து தரப்பினருடனும் இணைந்து கையாள வேண்டுமெனவும் அதற்கான நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .