Gavitha / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சிலர், வியாழக்கிழமை (27) கிளிநொச்சிக்கான விஜயமொன்றை மேற்கொண்டனர்.
ஐரோப்ப ஒன்றியத்தினால் வழங்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் இக்குழுவினர், ஆராய்ந்ததுடன் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் மேற்கொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மேற்பார்வை செய்தனர்.
சிவபுரம், புண்ணைநீராவி, பன்னங்கண்டி பகுதிகளிற்கு விஜயம் மேற்கொண்ட குழுவினர் மக்களின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், வீட்டுத்திட்டம் வழங்குவது தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட செயலகத்துக்குச் சென்று அரசாங்க அதிபருடன் அக்குழுவினர் கலந்துரையாடினர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், 'வீட்டுத்திட்டம் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காகவே மேற்படி குழுவினர் வருகை தந்துள்ளனர்' என்றார்.
21 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
53 minute ago
1 hours ago