2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் கைது

Niroshini   / 2016 மார்ச் 20 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 6.5 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் இருவரை காங்கேசன்துறை கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த படகை மறித்து சோதனையிட்டபோது, மூன்று பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில், 6.5 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதன்போது, படகிலிருந்த இந்திய மீனவர்;கள் இருவரையும் கைது செய்த கடற்படையினர், பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .