2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2016 மார்ச் 21 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 6.5 கிலோகிராம் கேரளா கஞ்சா கொண்டுவந்த இந்திய மீனவர்களை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார் ஞாயிற்றுக்கிழமை (20) உத்தரவிட்டார்.

கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் வந்த படகை மறித்து சோதனை செய்தபோது, படகினுள் 3 பொதிகளில் கஞ்சா மீட்கப்பட்டது.

கைதான இந்திய மீனவர்களையும் மீட்கப்பட்ட கஞ்சாவினையும் கடற்படையினர் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். தமிழகம், நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த 27 வயதுடைய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X