Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவுகளுக்குக் காரணமாக அமைவதாகத் தெரிவித்த தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், கூட்டமைப்பு விடுத்துள்ள ஒற்றுமைக்கான அழைப்பு என்பது, சுடலை ஞானம் போன்றதெனவும் கூறினார்.
தமிழ் அரசியல் சூழலில், புதிதாகப் பல கட்சிகள் உருவாகின்றமை, கூட்டமைப்பு விடுத்துள்ள ஒற்றுமைக்கான அழைப்பு தொடர்பில் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், யுத்தத்துக்குப் பின்னரான இந்த நிலைமாறுகால அரசியல் சூழலில், ஏகபோகமாக ஒரு கட்சிக்கு வாக்குப்பலத்தை வழங்குவதை விட, தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுருதி கொண்ட பலரையும் வெற்றி பெறவைத்து அந்தப் பண்மைத்துவத்தினூடாக ஒற்றுமையைப் பேணுவதே பொருத்தமாக அமையுமெனவும் தெரிவித்தார்.
36 minute ago
46 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
46 minute ago
53 minute ago
1 hours ago