Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
தனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினராகவிருந்த அங்கஜன் இராமநாதன் தனது இராஜினாமாக் கடிதத்தை வடமாகாண சபைக்குச் சமர்ப்பிக்கவில்லையென அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் செவ்வாய்க்கிழமை (25) சபையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அங்கஜன் இராமநாதனிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'வடமாகாண சபையில் எனது இடத்துக்கு விருப்பு வாக்கில் அடுத்த நிலையிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
வடமாகாண சபை தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்தமையால், ஈ.பி.டி.பி சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படக்கூடிய நிலையும் இருக்கின்றது.
இது தொடர்பில் தீர்மானம் எடுக்கக்கூடியவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரே. ஆகையால் எனது இராஜினாமா கடிதத்தை அவர்களுக்கு அனுப்பியுள்ளேன் அவர்கள் முடிவெடுத்து தேர்தல் ஆணையாளருக்கு இது தொடர்பில் அறிவிப்பார்கள்' என்றார்.
7 hours ago
9 hours ago
22 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
22 Oct 2025