Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நல்லூர்க் கந்தசுவாமி கோவில் மகோற்சவத்தை முன்னிட்டு, காவலரண்களில் சிறப்பானப் பணியை முன்னெடுக்க உதவிய சாரணர்கள் மற்றும் குருளைச் சாரணர்கள் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு, நல்லூர் ஆதீன மண்டபத்தில், நேற்று (11) காலை 10 மணியளவில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்டச் சாரணியச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ்ப்பாணம் மாநகரசபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, மிகச் சிறப்பாகச் செயற்பட்ட 03 மாணவர்கள் தங்கப்பதக்கம் சூட்டப்பட்டுக் கௌரவிக்கப்பட்டதுடன், ஏனையோர் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
2 hours ago
14 Jan 2026
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Jan 2026
14 Jan 2026