2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கலப்பையில் சிக்கியதில் இளைஞன் படுகாயம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

சாவகச்சேரி பகுதியில் உழவு இயந்திரத்தின் பின்னால் கட்டப்பட்டிருந்த கலப்பையுடன் மோட்டார் சைக்கிள் சிக்குண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டதுடன், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவிலைச் சேர்ந்த ஆ.ஐங்கரன் (வயது 21) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த பெண், எவ்வித காயங்களுமின்றி தப்பினார்.

உழவு இயந்திரத்துக்கு பின்பக்கமாக கலப்பை கட்டியவாறு செல்வதற்கு சாவகச்சேரி பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் கலப்பை, உழவு இயந்திரப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .