Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மார்ச் 19 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
இலங்கை மத்திய கலாசார நிதியம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுப் பிரிவு ஆகியன இணைந்து கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவின் தொடக்க விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்;.
இந்தப் பிரிவு நல்லூர் கோவில் வீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், வடமாகாணத்தில் வரலாற்று மரபுரிமைகளைப் பாதுகாக்கின்ற தொல்பொருள் சான்று பொருட்கள் அங்கு பாதுகாக்கப்படுகின்றன.
அந்தப் பிரிவில் கடமையாற்றுவதற்கு வரலாற்றுப் பிரிவில் படித்து பட்டம் பெற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நியமனச் சான்றிதழ்களும் இன்று கல்வி அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago