2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கல்லுக்கு வெடி வைத்தவர் காயம்

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் கல்லுடைப்பதற்கு வெடி வைத்த குடும்பஸ்தர் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (31) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்லுக்கு வைத்த வெடி தவறுதலாக வெடித்துள்ளது. இதனால் வெடித்து சிதறிய கல்லின் பாகங்கள் இவரின் மீது பட்டதில் உடல் முழுவதும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர்.

எனினும் காயமடைந்தவரின் பெயர் விபரங்களை பெறுவதில் சிக்கல் நிலை உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலதிக விசாரணைகளுக்காக அப் பகுதியில் தடஅறிவியல் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .