2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் தந்தை அற்ற பிள்ளைகள் அதிகம்

Gavitha   / 2016 மார்ச் 28 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் தந்தையை இழந்த 1,459 மாணவர்கள் கல்வி கற்று வருவதாக, வலயக் கல்வித்திணைக்களத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட 104 பாடசாலைகளில் 32,245 மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், கடந்த கால யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால் சுமார் 1,459 மாணவர்கள் தந்தையை; இழந்த நிலையில் உள்ளனர்.

இதனை விட 585 மாணவர்கள் தாய் தந்தையர்கள் இல்லாத நிலையில், சிறுவர் இல்லங்களில் தங்கியிருந்து கல்வியை தொடர்கின்றனர்.

இந்தத் தொகையில் அதிகமானோர் யுத்த காலத்தில் தந்தையை மாத்திரம் அல்லது தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்தவர்கள் ஆவர்.

இவற்றை விட 444 மாணவர்கள் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்;களாக காணப்படுவதுடன், இவர்களுக்கு கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள 17 விசேட கல்வி அலகுகளினூடாக கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .