2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

159 சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Niroshini   / 2016 மார்ச் 31 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, 159 சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மூன்றரை இலட்சம் ரூபா அபராதமும் பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவரித்திணைக்களத்தினால் தொடர்ச்சியான நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது, 159 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் 143 முறைப்படுகளுக்கு நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 143 வழக்குகளுக்கும் மூன்றரை இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது. மேலும் 15 வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளன.

கசிப்பு உற்பத்தி, சட்ட விரோதமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை, சட்ட விரோத மதுபான விற்பனை, சட்ட விரோதமாக சிறுவர்களுக்கு புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்தல் உட்பட பல்வேறுபட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X