2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சர்வதேச சுற்றுலா தின தேசிய நிகழ்வு யாழில் நடைபெற ஏற்பாடு

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

சர்வதேச சுற்றுலா தின தேசிய நிகழ்வு, இம்முறை “சுற்றுலாவும் டிஜிட்டல் பரிமாற்றமும்” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக, வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பேராசிரியர் க.தேவராஜா தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில், இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்ரைத்த அவர், சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கொழும்பில் இருந்து ரயில் மார்க்கமாக தென்பகுதி பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் வருகை தரவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கமைய, யாழ்ப்பாணம் மாநகரசபையின் மைதானத்தில் எதிர்வரும் 26ஆம் திகதியன்று சுற்றுலாத் துறைக்கான கண்காட்சியும் 27ஆம் திகதி கைலாசபதி கலையரங்கில் அங்குரார்ப்பண நிகழ்வுகளும் இடம்பெறுமெனத் தெரிவித்த அவர், உலக சுற்றுலா தினத்தையொட்டி, மாணவர்களுக்கிடையே கட்டுரைப் போட்டியும் நடத்தப்படவுள்ளதாகக் கூறினார்.

இவற்றுக்கு மேலதிகமாக, சுற்றுலாத்துறை தொடர்பான புகைப்படப் போட்டியும் வீடியோப்படப் போட்டியும் நடத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததுடன், உணவுத் திருவிழாவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--