2021 மே 08, சனிக்கிழமை

சர்வதேச முதியோர் தினவிழா

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

வடமாகாண  சமூக சேவைகள் திணைக்களத்தின் சர்வதேச முதியோர் தின விழா, கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி வடமாகாண திணைக்களப் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு காக்கா கடை சந்திக்கு அருகிலிருந்து ஆரம்பிக்கும் முதியோர் விழிப்புணர்வு நடைபவனி, கூட்டுறவு கலாசார மண்டபத்தைச் சென்றடையும். காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதியோர் தினவிழாவில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.

சிறப்பு விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கலந்துகொள்ளவுள்ளார்.

முதியோர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் முதியோர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

வடமாகாணத்தில் முதன்முறையாக மாகாண முதியோர் தினவிழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X