2021 மே 08, சனிக்கிழமை

'சர்வதேச விசாரணை வேண்டுமென்று சம்பந்தன் கூறமாட்டார்'

Menaka Mookandi   / 2016 ஜூலை 29 , மு.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதையே நானும் விரும்புகின்றேன். கட்சிகள் பலவும் அவற்றை விரும்பினாலும், அரசியல் காரணங்களுக்காக அதனை வெளியில் கூறமாட்டார்களென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில், நேற்று வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், சர்வதேச விசாரணைதான் வேண்டும் என்று கூறினாலும், அதனை உறுதிபட அவர் கூறமாட்டார். மேலோட்டமாகவே சொல்லுவார்' என்றார்.

'மீள்குடியேற்ற செயலணியில் வடமாகாணத்தில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். கட்டாயம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அல்லது வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்க வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X