Menaka Mookandi / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
7 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான சைக்கிளொன்றைத் திருடிய குற்றவாளி ஒருவருக்கு, 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
சுன்னாகம், ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு, கடந்த 2015ஆம் ஆண்டு மாசி மாதம் 13ஆம் திகதி அத்துமீறி நுழைந்துள்ள மேற்படி நபர், அங்கிருந்த சைக்கிளைத் திருடிச் சென்றிருந்தார்.
இது தொடர்பில், சைக்கிளின் உரிமையாளரால், பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை, புதன்கிழமை இடம்பெற்றபோதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.
6 hours ago
8 hours ago
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
28 Dec 2025