2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

சிறுமியை காணவில்லை

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 16 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், குரும்பசிட்டி கிழக்கு, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார் என்று, அவரது பெற்றோரால், தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சிறுமி, கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

மகேந்திரன் வினித்தா என்ற மேற்படி சிறுமி, கடந்த 12ஆம் திகதி மாலை வேளையில், வீட்டில் இருந்த போதே, திடீரெனக் காணாமல் போயுள்ளார். எங்கும் தேடியும் காணாத நிலையில், சிறுமியின் தாயார், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், தெல்லிப்பழை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 021 224 0222 அல்லது 0718591321 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.எல்.டி.எஸ்.பிரியந்த தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .