Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திட்டித்தீர்த்தனர்.
இன்று (19) யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைப்பதுக்காக பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், பொலிஸார், போராட்டக்கார்கள் மூவரை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து அருட்தந்தை சக்திவேல் தலைமையில் மூவரை அழைத்து சென்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி அவர்களைச் சந்திக்காது திரும்பிச் சென்றிருந்தார்.
இதனால் ஆத்திரமுற்ற காணாமல் போனவர்களின் உறவினர்கள், நிகழ்வு முடிந்து வெளியேறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை கடும் கோபத்துடன் திட்டி தீர்த்தனர்.
அதன்போது ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறி அழைத்து சென்று ஏமாற்றிய பொலிஸாரையும் திட்டி தீர்த்தனர்.
2 hours ago
9 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Oct 2025