Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், சொர்ணகுமார் சொரூபன், டி.விஜிதா
தனியார் நிதி நிறுவனமொன்றுக்குள் திடீரென நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர், கத்திமுனையில் 18 இலட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணத்தைக் கொள்யைடித்துத் தப்பிச் சென்ற சம்பவமொன்று, சாவகச்சேரியில் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சாவகச்சேரி நகரத்தின் கண்டி நெடுஞ்சாலையில் (A9) உள்ள குறித்த தனியார் நிதி நிறுவனத்தை, இன்றுக் காலை 8.30 மணிக்கு வழமைபோல திறந்த பணியாளர்கள், பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த பணத்தை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர்.
இதன்போது, முகத்தை முழுமையாக மூடியவாறு இருக்கும் தலைக்கவசத்தை அணிந்த வண்ணம் கத்தியோடு உள்நுழைந்த நபரொருவர், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி, பணத்தைக் கொள்ளையிட்டு, மோட்டர் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago