Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடுமென, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு, நேற்று (01) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளதாகவும் அந்த நோக்கத்துக்காகவே விடுதலைப்புலிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியும் இருந்தார்களெனவும் கூறினார்.
ஆனால், யுத்தத்துக்குப் பிறகு சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்தைப் பிணையெடுக்கும் விதமாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடந்துகொண்டனரெனத் தெரிவித்த அவர், இன்று அரசியல் அரங்கில் அவர்கள் காலாவதியாகி வரும் நிலையில், தமிழ் மக்களுக்கான தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
“வெற்றிடத்துக்குள் காற்றுப் புகுவதுபோல, தலைவர் பிரபாகரன் இல்லாத அரசியல் வெளிக்குள் எல்லோரும் தாங்கள்தான் அடுத்த தலைமை என்று ஆளாளுக்குப் போட்டி போடுகிறார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான மாற்று அணி தாங்கள்தான் என்று கூறுகிறார்கள். தாங்கள்தான் மாற்றுத் தலைமை என்று எவரும் உரிமை கோரமுடியாது. தமிழ் மக்களே தங்களுக்கான சரியான தலைமையைத் தேர்ந்தெடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
“தேர்தலை மட்டுமே இலக்காகக் கொண்ட சந்தர்ப்பவாதக் கூட்டணிகளில் இணைந்து பிழையானவர்களைப் பலப்படுத்தக்கூடாது என்பதற்காகவே நாங்கள் தனியாகத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம்” என்றும் தெரிவித்தார்.
13 minute ago
20 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
2 hours ago
05 Nov 2025