2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தமிழர்களின் அடையாளங்களை சிதைக்க முயற்சி: சிறிதரன்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

எமது இனத்தின் அடையாளங்களையும் எமது இனத்தையும் சிதைப்பதற்கு பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அணைக்கட்டு புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இரணைமடுக்குளம் எமது மக்களின் இதயமாக விளங்குவதோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்பும் ஒரு தளமாக அமைந்துள்ளது. இதனைவைத்து பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. இதன் மூலம் நான் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்;திருந்தேன். இதனுடைய பலாபலன்கள்  இன்;னும் இரண்டு வருடங்;களில் தெரியவரும் என நான் நம்புகின்றேன்.

கடந்த தேர்தல் காலத்திலும் அதற்கு முன்னரும் இரணைமடுக் குளத்தினை வைத்து எனக்கு எதிராக பல்வேறு பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் எனக்கு எதிரான பல துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டன.

இதற்குப்பின்னால் வலிகளும் வேதனைகளும் உள்ளன. நான் மக்களுக்கான சேவையை சரியாகச் செய்திருக்கின்றேன்.

எதிர்காலத்திலும் நான் மக்களின் நலன்களுக்காகவே செயற்படுவேன். கிளிநொச்சி இணைமடுக்குளத்;தைச் சூழ பாரிய இராணுவ முகாம்கள் உள்ளன. இரணைமடுக்குளத்தின் நீர்ப்பாசன விடுதி இதுவரை விடுவிக்கப்படவில்;லை.

மேலும் கிழக்கோடு இணைந்த ஆட்சியை அமைப்பதற்கான காலம் கனிந்து வருகின்றது. அதற்காக நாங்கள் எல்லோரும் உழைக்க வேண்டும்' என அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X