2021 மார்ச் 01, திங்கட்கிழமை

திருடிய வீட்டில் பொலிஸாருடன் சென்று பொருளை ஒப்படைத்த திருடன்

Gavitha   / 2016 மே 17 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரமொன்றை, திருடிய வீட்டிலேயே கொடுத்த சம்பவமொன்று நீர்வேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

நீர்வேலியிலுள்ள வீடொன்றில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரத்தை திருடிய நபரொருவர், அதனை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றுள்ளார். 

அதன்போது, ரோந்து சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுன்னாகம் பொலிஸார், முச்சக்கரவண்டியை வழிமறித்து விசாரித்துள்ளனர்.

இதன்போது, குறித்த மோட்டார் இயந்திரத்தை தான் ஒரு வீட்டிலிருந்து திருடிக்கொண்டு வருவதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

பின்னர் திருடனை அழைத்துக்கொண்டு திருடு போன வீட்டுக்குச் சென்ற பொலிஸார், நித்திரையில் இருந்த வீட்டு உரிமையாளரை எழுப்பி, 'உங்களது வீட்டில் மோட்டார் இயந்திரம் திருடு போயுள்ளதா?' என்று கேட்டுள்ளனர்.

மோட்டார் வைத்திருந்த அறையைச் சென்று பார்த்த வீட்டு உரிமையாளர், மோட்டார் இயந்திரத்தை காணவில்லை என்று பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் திருடப்பட்ட மோட்டார் இயந்திரம் உரிமையாளருக்கு கையளிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .