Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 22 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
வட மாகாண சபை தயாரித்த அரசியல் தீர்வு திட்டம் சனிக்கிழமை (21) மாலை எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டது.
எதிர்க் கட்சி தலைவரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்து இந்த தீர்வு திட்டத்தை கையளித்துள்ளனர்.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரசியலமைப்பு மறுசீரமைப்பில் வடக்கு வாழ் மக்களின் அரசியல் அபிலாசைகளும் உள்வாங்கப்படும் வகையில், வடக்கு மாகாண சபை 19 பேர் கொண்ட குழு ஒன்றின் ஊடாக தமிழ் பேசும் மக்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்ட தீர்வு திட்டம் ஒன்றை தயாரித்திருந்தது.
இந்த தீர்வு திட்டமானது, கடந்த மாதம் 16ஆம் திகதி எதிர்க்கட்சி தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் என கூறப்பட்டபோதும் அது பின்னர் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் மீண்டும் 30ஆம் திகதி கையளிக்க தீர்மானிக்கப்பட்டபோதும் கையளிக்கப்படாத நிலையில் மாகாண சபையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் முறுகல் நிலை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago