Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூலை 31 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-காயத்திரி விக்கினேஸ்வரன்
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அமெரிக்கா, கனடா நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மருத்துவ அமைப்பினதும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினதும் நிதிப் பங்களிப்பில் அதிநவீன உயர்தர சைவ உணவகம் அமைக்கப்பட்டு சனிக்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டது.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகரும் நோயாளர் நலன்புரிச் சங்கத் தலைவருமான வைத்தியர் க.இளங்கோஞானியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமெரிக்கா அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் உபதலைவர் வைத்தியகலாநிதி திருமதி ராஜம் தெய்வேந்திரம் பிரதம விருந்தினராகவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் க.நந்தகுமாரன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை முன்னாள் வைத்திய அட்சகரும் நோயாளர் நலன்புரிச் சங்க ஆலோசகருமான வைத்தியர் மு.உமாசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், ஆசியுரையை கலாநிதி ஆறுதிருமுருகன் வரவேற்புரையை தாதிய பரிபாலகர் சோ.இராசேந்திரன், நன்றியுரையை நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளர் லயன் சி.ஹரிகரன் வழங்கினர்.
இந்நிகழ்வில், கட்டட ஒப்பந்தக்காரர் கௌரவிப்பும் நடைபெற்றது.
8 hours ago
17 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Oct 2025