2026 ஜனவரி 07, புதன்கிழமை

நெடுந்தீவுக் கடற்பரப்பில் 80 கி.கி கஞ்சா மீட்பு

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடத்தவிருந்த 80 கிலோகிராம் கஞ்சா பொதிகளை, நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து, நேற்று (27), கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகத்தின் பேரில், மன்னர் பகுதியைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவுக்கு மேற்கு கடற்பரப்பில், சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகொன்றை சோதனைக்குட்படுத்திய போதே, அதிலிருந்து 80 கிலோகிராம் கஞ்சா பொதிகளை, கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள், 50 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியுடையதெனவும், கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், கஞ்சா பொதிகளுடன் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .