2021 மே 12, புதன்கிழமை

நந்திக்கடல் பகுதியிலுள்ள இராணுவ வேலியை அகற்றுமாறு கோரிக்கை

Sudharshini   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கேப்பாப்புலவு நந்திக்கடல் பகுதியில் தொழில்புரிவதற்கு, இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்;ள 500 மீற்றர் நீளமான வேலி தடையாகவுள்ளதென கேப்பாப்புலவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (26) முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கேப்பாப்புலவு நந்திக்கடல் மீனவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

நந்திக்கடல் கரையோரத்தில் இராணுவத்தினால் அமைக்கப்பட்டுள்ள வேலியினால் கேப்பாப்புலவு மக்கள் கடலுக்குள் செல்வதில் நெருக்கடி நிலைமை காணப்படுவதாகவும் அண்மையில் கடற்றொழிலாளி ஒருவர் நந்திக்கடலில் உயிரிழந்தபோது அவ் உடலினை மீட்கமுடியாத நிலைமை காணப்பட்டது.

அத்துடன், நந்திக்கடலில் முதலையின் தாக்குதலுக்கு கடற்றொழிலாளர்கள் அடிக்கடி முகங்கொடுப்பதன் காரணமாக காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்வதற்கு கடலோரமாக அமைக்கப்பட்டுள்ள இராணுவவேலி தடையாகவுள்ளது.

எனவே, இவ் இராணுவ வேலியினை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேப்பாப்புலவு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .