Menaka Mookandi / 2016 மார்ச் 31 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம், சீனியர் வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் ஜெ.கஜநிதிபாலனின் வீட்டின் மீது குழுவொன்று புதன்கிழமை (30) கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொள்ள முயன்றபோது, அந்தக் கற்கள் அயல்வீட்டில் போய் வீழ்ந்துள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று, இந்த கல்வீச்சை மேற்கொள்ள முயன்றதாகவும் இந்த கற்கள் அயல்வீட்டில் போய் விழுந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொள்ள முயன்றவர்கள், பாடசாலை மாணவர்கள் என்றும் அவர்களின் பின்னால் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு தொடர்புகள் இருக்கலாம் என்றும், நீதவானை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் இவ்வாறு செயற்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் கூறினர்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago