2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

நினைவுத் தூபி வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுச்சேர்த்தமை வரவேற்கத்தக்கது

Princiya Dixci   / 2016 மார்ச் 23 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தினால் உயிரிழந்த எமது உறவுகளை நினைவுகூறத்தக்க வகையில் பொது நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டுமென நான் நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை கொண்டு வந்திருந்தேன். 

எனது இந்தக் கோரிக்கைக்கு அமைவாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க அவர்களும் கடந்த 08ஆம் திகதி நாடாளுமன்றத்தில் குரலெழுப்பியிருந்தார். அந்த வகையில் இந்த நிலைப்பாட்டை நான் வருவேற்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், யுத்தம் காரணமாக உயிரிழந்த எமது உறவுகளை நினைவுக்கூற ஏதுவான வகையில் ஓமந்தைப் பகுதியில் வசதியான ஓரிடத்தில் பொது நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். 

இதனை முன்வைத்தே நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணையைக் கொண்டு வந்திருந்தேன். அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க அவர்களும் குரலெழுப்பியுள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம்.

எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் எமது மக்களின் உணர்வுகள் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக முரல் கொடுத்தும், செயற்பட்டும் வருகின்ற எமக்கு சார்பாக, இவ்வாறான பெரும்பான்னையினக் கட்சிகளின் குரல்களும் ஒலிப்பதானது, இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேலும் இலகுபடுத்தும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .