2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பொங்கல் திருவிழா - 2020

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள “பொங்கல் திருவிழா - 2020”, நாளை மறுதினம் (15) நடைபெறவுள்ளது. 

இதன்போது, முற்பகல் 10 மணிக்கு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து சிலம்பாட்டம், பொய்க் கால் குதிரை ஆட்டம், மாட்டு வண்டி பவனி உள்ளிட்ட பாரம்பரிய அம்சங்களுடன் கூடிய பண்பாட்டு நடைபவனி யாழ்ப்பாணம் நகரை வலம் வரவுள்ளது.  

கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமாகும் இந்தப் பண்பாட்டு நடைபவனி, காங்கேசன்துறை வீதியூடாக வைத்தியசாலை வீதியை அடைந்து, கஸ்தூரியார் வீதியூடாக மீண்டும் கல்லூரியை வந்தடையும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--