Editorial / 2020 ஜனவரி 20 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு கைவேலி 01ஆம் வட்டாரப்பகுதியில், மக்களுக்குச் சொந்தமான காணியிலும் அரசாங்கக் காணிகளிலும், பூச்சிக்குப் பயன்படுத்தப்படும் வெள்ளைமண், தொடர்ச்சியாக அகழ்வுக்குட்படுத்தப்படுவதால், குறித்த பிரதேசம், சதுப்பு நிலமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கிராம மக்கள் பிரதேச செயலகத்துக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கிராம சேவையாளர், கிராம அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், மணல் அகழப்படும் இடங்களைப் பார்வையிட்டனர்.
அரசாங்கக் காணிகள், தனியாருக்குச் சொந்தமான காணிகளில், பூச்சுக்குப் பயன்படுத்தப்படும் வெள்ளை மண் அகழப்படுவதால், இந்தப் பகுதியிலுள்ள பாரிய மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மண் வெளிமாவட்டங்களுக்குக் கொண்டுச் செல்லப்படுவதாக இதன்போது மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில், பல அதிகாரிகளுக்கு தெரிவித்த போதிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மணல் அகழ்வில் ஈடுபட்டோரை கிராம அபிவிருத்தி சங்கம் வழிமறித்தபோது, மாவட்ட செயலகத்தில் இருந்து, அலைபேசியில் தொடர்புகொண்ட அதிகாரியொருவர், அகழ்வைத் தடுக்க முயாது என்று தெரிவித்திருந்ததாக, மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த அகழ்வுப் பணிகள் காரணமாக, கைவேலி கிராமத்தின் வீதிகள் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதாகவும் பாடசாலை மாணவர்கள், மழை நேரத்தில் செல்லமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக, கைவேலி கிராம அலுவலகர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோரால், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடந்த 17ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago